Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ் தீவிரவாதிகளால் பயன்படுத்தப்பட்ட சுரங்கப்பாதை கைப்பற்றப்பட்டது

In உலகம்
Published: 06:37 GMT, Feb 13, 2017 |
0 Comments
1256
icon_com
This post was written by : Sylviya

சிரியாவில் உள்ள அல் – பாப் (al-Bab) நகரில், ஐ.எஸ் தீவிரவாதிகளால் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் சுரங்கப்பாதை ஒன்று இனந்தெரியாத வீரர்கள் சிலரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுரங்கப்பாதை தொடர்பான காணொளியொன்றை துருக்கி இராணுவம் வெளியிட்டுள்ளது. குறித்த காணொளியில் சில இனந்தெரியாத வீரர்கள் அரபு மொழியில் உரையாடிக்கொண்டு சுரங்கப்பாதை வழியே பயணிப்பது பதிவாகியுள்ளது.

இந்த  சுரங்கப்பாதை சுமார் 10 தொடக்கம் 15 வருடங்கள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. குறித்த சுரங்கப்பாதை வழியாக அல் – பாப் நகரை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இந்த சுரங்கப்பாதை ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள துருக்கி இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg