Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாநில அளவிலான ஹொக்கி போட்டி: சுழற் கிண்ணத்தை கைப்பற்றியது தமிழக காவல்துறை

In கிாிக்கட்
Published: 07:18 GMT, Feb 13, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Shailu
01

மாநில அளவிலான ஹொக்கி போட்டியில் தமிழக காவல் துறை அணி சுழற் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

மதுரை திருநகரில் உள்ள அண்ணா பூங்கா விளையாட்டு மைதானத்தில் திருநகர் ஹொக்கி கிளப் சார்பில் மறைந்த ஹொக்கி வீரர்கள் பாலசுப்பிரமணியம், ஜெயசிங், பழனியாண்டவர், மெய்யப்பன் ஆகியோர் நினைவு சுழற் கிண்ணத்திற்கான 18-வது ஆண்டு மாநில அளவிலான ஹொக்கி போட்டி நடத்தப்பட்டது.

நாக்அவுட் முறையில் கடந்த 7நாட்கள் நடந்த இந்த போட்டியில் 26 அணிகள் மோதின. இதன் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு காவல் துறை அணியும் திருநகர் ஆக்கி கிளப் அணியும் களம் இறங்கினர்.

மிகுந்த பரபரப்புக்கு இடையே தமிழ்நாடு காவல் துறை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சுழற் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

அந்தவகையில், 2-வது இடத்தை திருநகர் அணியும், 3-வது இடத்தை மத்திய சுங்கத்துறை அணியும், 4-வது இடத்தை கோவை ஹொக்கி அணியும் பெற்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg