Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன்று மாலை சசிகலா முதல்வர் ஆவார்: வைகைச் செல்வன்

In இந்தியா
Published: 07:34 GMT, Feb 13, 2017 |
0 Comments
2231
icon_com
This post was written by : Surenth
Vaigai Selvan

தமிழகத்தை ஆட்சி அமைக்குமாறு ஆளுநரிடம் இருந்து சசிகலா நடராஜனுக்கு அழைப்பு வரும் என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் தோட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு வி.கே. சசிகலாவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலைக்குள் அழைப்பார்.

தமிழக முதலமைச்சரை தெரிவு செய்வது தொடர்பில் ஆளுநருக்கு பா.ஜ.க மற்றும் தி.மு.க ஆகியன அழுத்தம் கொடுக்கின்றது.

இவ்வாறு ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பான கருத்துக்களுக்கு ஆளுநர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சசிகலா தலைமையில் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்து சேவையை தொடர சட்ட மன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளனர்.

எனவே இன்று மாலை சசிகலாவை அழைத்து தமிழக ஆட்சியை அவருக்கு வழங்க வேண்டும்” எனவும் இதன் போது வேண்டுகோள் விடுத்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg