Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காங்கிரஸ் கட்சியின் ஆதரவு யாருக்கு? – விளக்கமளித்தார் திருநாவுக்கரசர்

In இந்தியா
Updated: 09:12 GMT, Feb 13, 2017 | Published: 08:39 GMT, Feb 13, 2017 |
0 Comments
1272
icon_com
This post was written by : Surenth
Thirunavukarasar

காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கும் இல்லை, சசிகலாவுக்கும் இல்லை எனவும் அரசியல் சட்டத்துக்கே எங்கள் ஆதரவு எனவும் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுகரசர் விளக்கம் அளித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன் போது மேலும் தெரிவிக்கையில்,

சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரை வலியுறுத்துவதால், நாங்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

எங்கள் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கும் இல்லை, சசிகலாவுக்கும் இல்லை. அரசியல் சட்டத்துக்கே. அரசியல் சாசனப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

குறிப்பாக, ஏதாவது ஒரு பக்கத்தில் இருப்பவரை அழைத்து ஆட்சி அமைக்க அனுமதித்து, அவர்களை சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வைக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்.

சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதம் கொடுத்தவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அவரது பெரும்பான்மையில் சந்தேகம் இருந்தால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல வேண்டும் ” என இதன் போது தெரிவித்திருந்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg