Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூவத்தூரில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது : ஜி.கே. வாசன்

In இந்தியா
Updated: 11:07 GMT, Feb 13, 2017 | Published: 10:50 GMT, Feb 13, 2017 |
0 Comments
1170
icon_com
This post was written by : Surenth
Attacks Against Journalists in Koovathur

அ.தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் பகுதியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூவத்தூர் பகுதியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க கட்சிக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆட்சி, அதிகாரப் போட்டியால் அசாதாரண சூழல் நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில், அரசியல் நிகழ்வுகள் குறித்து செய்தி சேகரிக்கச் செல்லும் பத்திரிகை மற்றும் ஊடகம் சார்ந்த நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மிகுந்த துரதிஷ்டவசமானது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

பத்திரிகை மற்றும் ஊடகத்தின் பணிகள் மிகவும் இன்றியமையாதது. இத்தகைய ஜனநாயகப் பணிகளை செய்யவிடாமல் தடுத்து நிறுத்துபவர்களையும், தாக்குதல் நடத்துபவர்களையும் பொலிஸார் அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் வழங்க வேண்டும்.

பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதை தடுப்பதற்கும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதற்கும் தமிழக பொலிஸார் தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg