Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரண்டாம் உலகப் போர் காலத்திற்குரிய குண்டு வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டது

In ஐரோப்பா
Updated: 12:46 GMT, Feb 13, 2017 | Published: 09:40 GMT, Feb 13, 2017 |
0 Comments
1222
icon_com
This post was written by : Sylviya

கிரேக்கத்தின் தெசலோனிக்கி (Thessaloniki) நகரில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர் காலத்திற்குரிய 500 எல்.பி எடை கொண்ட குண்டு, வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

கிரேக்கத்தின் இராணுவத்தை சேர்ந்த சில நிபுணர்களாலேயே குறித்த குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பொருட்டு குறித்த பகுதியில் இருந்த சுமார் 72,000 பேர் வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக கிரேக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் உள்ளூர் உடற்பயிற்சி நிலையங்கள், மைதானங்கள் மற்றும் அருகில் உள்ள நகராட்சி மண்டபங்கள் ஆகியவற்றில் தங்கியதாகவும் அவர்களுக்கு இலவச குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொதுமக்களில் ஒருவர், “இந்த குண்டு தொடர்பில் ஒரு வாரத்திற்கு முன்னதாக அதிகாரிகள் எமக்கு தெரிவித்தனர். இந்த விடயத்தை கேள்வயுற்ற நாள் முதல் நாம் அச்சத்துடனேயே இருந்தோம்” என தெரிவித்துள்ளார்.

தெசலோனிக்கி பகுதியில் வீதியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதே சுமார் 500 எல்.பி எடை கொண்ட குறித்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது பின்னர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg