Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுமந்திரன் விவகாரம்: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

In இலங்கை
Published: 10:12 GMT, Feb 13, 2017 |
0 Comments
1275
icon_com
This post was written by : Vithushagan
unnamed (4)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஐவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா இன்று (திங்கட்கிழமை)  உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டின் பேரில்  கடந்த மாதம் 14ஆம் திகதி ஐவர் கைதுசெய்யப்பட்டனர்.

இதேவேளை சந்தேகநபர்களிடம் மீளவும் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட வேண்டியிருப்பதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தனர். இதனை கவனத்தில் கொண்ட நீதிமன்றம் எதிர்வரும் 14, 15 மற்றும் 16ம் திகதிகளில் அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து வாக்குமூலங்களை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இரண்டாவது சந்தேகநபரை வெளியிடங்களுக்குக் அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அதற்கான அனுமதியையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

இதற்கமைய அவரை 20, 21 மற்றும் 22ம் திகதிகளில் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து வெளியில் அழைத்துச்சென்று விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg