Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துமிந்த சில்வாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

In இலங்கை
Published: 10:37 GMT, Feb 13, 2017 |
0 Comments
1151
icon_com
This post was written by : Vithushagan
asda1

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுன்றஉறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக சொத்து விபரங்களை உரிய முறையில் வெளியிடாத காரணத்திற்காக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு மேலதிக நீதவான் அருணிஆடிகல முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது.

சுகவீனம் காரணமாக துமிந்த சில்வா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்துக்களை அடுத்து அவரை மருத்துவப் பரிசோதனை உட்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி ஒத்திவைத்ததுடன், உடல் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் அருணிஆடிகல உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், சட்ட வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, வைத்திய நிபுணர் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg