Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பங்களாதேஷ் அணி எதிரான டெஸ்ட் போட்டி: ஆட்ட நாயகனாக விராட் கோஹ்லி தெரிவு

In கிாிக்கட்
Updated: 11:51 GMT, Feb 13, 2017 | Published: 11:51 GMT, Feb 13, 2017 |
0 Comments
1284
icon_com
This post was written by : Shailu
Virat Kohli

பங்களாதேஷ் அணி எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ள இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 38 ஓட்டங்களும் பெற்றுக்கொண்டதையடுத்து, அவர் ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அந்தவகையில், 4 தொடர்களில் தொடர்ச்சியாக 4 இரட்டை சதம் அடித்த உலகின் ஒரே வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இதற்கு முன்பு மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் இரட்டை சதத்தை பதிவு செய்து இருந்தார்.
பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச அரங்கில் இடம்பெற்றது.

இப்போட்டியின் இன்றைய (திங்கட்கிழமை) 5ஆம் நாள் ஆட்டத்தில் 250 ஓட்டங்கள் பெற்ற பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின், ஜடேஜா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். மேலும் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையிர், பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 208 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg