Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளிடம் விளக்கம் கோரவும்: றிஷாட்

In இலங்கை
Updated: 12:12 GMT, Feb 13, 2017 | Published: 12:08 GMT, Feb 13, 2017 |
0 Comments
1302
icon_com
This post was written by : Vithushagan
unnamed (8)

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் கலந்துகொள்ளாத அதிகாரிகளிடம் எழுத்து மூலம் விளக்கம் கோருமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் உத்தரவிட்டுள்ளார்.

செட்டிகுளப் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்றது. இதன்போதே உதவிப் பிரதேச செயலாளர் முகுந்தனுக்கு அமைச்சர் றிஷாட் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் தவறாது பங்கேற்கும் போது அதிகாரிகளின் அக்கறையற்ற நடவடிக்கை  கண்டனத்துக்குரியதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் கிராம அமைப்புக்களின் பிரதி நிதிகளுக்கும் தவறாது அழைப்புக்களை வழங்குமாறும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg