Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கு வந்த சோதனை!

In சினிமா
Published: 12:27 GMT, Feb 13, 2017 |
0 Comments
1234
icon_com
This post was written by : Surenth
Modda Siva Ketta Siva

ராகவா லாரன்ஸ் நடிப்பில் சாய் ரமணி இயக்கத்தில் உருவாகியிருக்கின்றது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ திரைப்படம். சத்யராஜ், நிக்கி கல்ராணி, கோவை சரளா, சதீஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி இப்படத்தை தயாரித்துள்ளார்.

வேந்தர் மூவிஸ் மற்றும் சிவபாலன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை வெளியிடுகிறது. இப்படம் வருகிற பெப்ரவரி 17ஆம் திகதி வெளியாவதாக இருந்தது. இந்நிலையில், இந்த படத்துக்கு எதிராக சினிமா பைனாசியர் போத்ரா நீதிமன்றத்தில் வழக்கு பதிவு படத்தை வெளியிட தடை வாங்கியிருந்தார்.

அந்த தடையை உடைப்பதற்காக வேந்தர் மூவிஸ் நிறுவனமும், சிவபாலன் பிக்சர்ஸ் நிறுவனமும் கடுமையாக முயன்று வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் இப்படத்தின் தடையை திரும்ப பெறவேண்டும் என்று நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், அன்றைய நீதிபதி அதை ஏற்கவில்லை.

எனவே, இன்று வேறு ஒரு நீதிபதியிடம் அந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து அந்த வழக்கின் தன்மையை பார்த்துவிட்டு இது ஒன்றும் அவரச வழக்கு கிடையாது. இதை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்று அந்த நீதிபதி கூறிவிட்டார்.

இந்த நிலையில், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் எதிர்வரும் 17 ஆம் திகதி வெளியாக வாய்ப்பில்லாதது போன்றே தோன்றுகிறது. விரைவில், இதுகுறித்த நல்ல செய்தி வெளிவரும் என நம்பப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg