Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எச்.எம்.பி நோர்த்தம்பர்லாண்ட் சிறைச்சாலையில் நிகழும் சட்டவிரோத செயற்பாடுகள் அம்பலம்

In
Updated: 15:41 GMT, Feb 13, 2017 | Published: 12:18 GMT, Feb 13, 2017 |
0 Comments
1809
This post was written by : Sylviya

பிரித்தானியாவில் உள்ள எச்.எம்.பி நோர்த்தம்பர்லாண்ட்  (HMP Northumberland) சிறைச்சாலையில் நிகழும் சில சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான  ரகசிய தகவல்கள், சர்வதேச ஊடகம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ளன.

ரகசிய நிருபர் ஒருவர் சுமார் இரண்டு மாதங்களாக மேற்குறித்த சிறைச்சாலையில் தகவல் திரட்டியதாகவும் அதன் போது பல உண்மைகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நிருபர் அளித்த தகவல்களின் அடிப்படையில், குறித்த சிறைச்சாலையில் 1,348 சிறைச்சாலைக் கைதிகள் உள்ளதாகவும் அவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எனவும் வன்முறைகளில் அதிகளவில் ஈடுபடுகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த சிறைச்சாலையில் உள்ள சில பாதுகாப்பு வேலிகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த நிருபர் அளித்த தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நீதிஅமைச்சு, குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg