Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோல்வி என்பது வெற்றிக்கான பாடம்: நடிகர் கார்த்தி

In சினிமா
Updated: 13:01 GMT, Feb 13, 2017 | Published: 13:01 GMT, Feb 13, 2017 |
0 Comments
1230
This post was written by : Surenth

படம் ஒன்று தோல்வி அடையும் போது தான். புதிய பாடம் ஒன்றை கற்றுக்கொள்ள முடியும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நடிக்க வந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்த பத்து ஆண்டுகளில் வெறும் 13 படங்களில்தான் நடித்திருப்பேன். அதற்கு காரணம், தோல்வியிலிருந்து பாடம் கற்றதுதான்.

முதல் முறை தோல்வியை சந்தித்தபோது துவண்டு போனேன். இன்னொரு படம் தோல்வி அடையும்போதுதான் நாம் தெளிவாகிறோம். அப்போதுதான் அமர்ந்து, நிதானமாக யோசித்தேன். இந்த கதை வித்தியாசமாக இருந்தது.

ஆனால் சொன்ன விதத்தில் என்ன தவறு நடந்தது என தோல்வி படத்தை பற்றி அலசி ஆராய்ந்தேன். நிறைய விஷயங்கள் புரிந்து கொண்டேன். சினிமாவில் எண்ணிக்கை முக்கியமல்ல.

நல்ல தரமான படங்களை தர வேண்டும். அதற்காக காத்திருப்பதில் தவறில்லை என முடிவு செய்தேன். அதனால்தான் பத்து ஆண்டில் குறைந்த படங்களிலேயே நடித்தேன். இப்போது ஒவ்வொரு அடியும் பார்த்து எடுத்து வைக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg