Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்கள் பணிக்காகத்தான் நாடாளுமன்றம் சென்றோம் : மனோகணேசன்

In இலங்கை
Published: 16:01 GMT, Feb 13, 2017 |
0 Comments
1423
icon_com
This post was written by : Vithushagan
unnamed (9)

கடந்த காலங்களில் உள்ள தலைவர்களை போல நாங்கள் தேங்காய் துருவ போகவில்லை. மக்களுக்காக பணிகளை முன்னெடுக்கவே நாடாளுமன்றத்துக்கு சென்றுள்ளோம் என தேசிய சுகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கமைய இன்று (திங்கட்கிழமை) காலை நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ பொகவனா தோட்டத்தில் அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், அரசாங்கத்திடம் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்காளி கட்சியாகவே செயல்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் எமது மலையக மக்களின் பிரச்சினைகளை நன்கு ஆராய்ந்து உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்தவகையில் இந்திய அரசாங்கம் எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையை ஏற்று எமது மக்களின் அபிவிருத்திக்காகவும் நல்ல வாழ்க்கைக்காகவும் பல்வேது உதவிகளை செய்து வருகின்றனர்.

மலையகத்தில் நவீனமான நாகரீகமான வாழ்க்கையை வாழ வைக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயல்பாடு மூலம் 50,000 வீடுகள் கட்டியே தீருவோம். இதன் ஊடாக அனைத்து மலையக மக்களையும் சுய கௌரவமான வாழ்க்கையை வாழ வைப்போம்.

கடந்த காலங்களில் நாடாளுமன்றம் சென்றவர்கள் மலையக மக்களின் உரிமைக்காக குரல் எழுப்புவது குறைவாகவே இருந்தது. இன்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக மக்களுடைய உரிமைக்காக குரல் எழுப்பி வருகின்றது.

கல்வி வளர்ச்சி எமது சமூகத்தின் சுயமான கௌரவமான வாழ்க்கையை உருவாக்கும் அதற்காக எமது அமைச்சர் இன்று பல்வேறு மட்டத்தில் குரல் எழுப்பி வருகின்றார். அதேபோன்று தனி வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்று நடக்க அமைச்சர் திகாம்பரம் பாடுபட்டு வருகின்றார்.

தொழில் வாய்ப்பு ஏனைய சேவைகள் தொடர்பில் அனைத்தும் நிறைவேற்றம் அடைந்து வருகின்றது. தமிழ் முற்போக்கு கூட்டணி இந்த அரசாங்கத்தில் பங்காளி கட்சியாக செயற்படுகின்றது. ஆகையால் அனைத்து தேவைகளும் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிரதமர் மோடியிடம் நாம் வழியுறுத்தல் செய்ததற்கு அமைவாக இன்று இந்திய அரசாங்கம் மலையக மக்களின் வாழ்வின் எழுச்சிக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது’ என தெரிவித்தார்

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg