Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேப்பாப்புலவு போராட்டத்துக்கு கல்விச் சமூகத்தினர் ஆதரவு வழங்க வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்

In இலங்கை
Published: 17:11 GMT, Feb 13, 2017 |
0 Comments
1194
icon_com
This post was written by : Vithushagan

ஒரு மனிதனுக்கு காணியும் கல்வியும் அடிப்படை மனித உரிமை ஆகும். மறுக்கப்பட்டுள்ள இந்த உரிமைகளுக்காக போராடும் கேப்பாப்புலவு மாணவர்களுக்கு உறுதுணையாக அனைத்து மாணவர்களும், கல்வி சமூகத்தினரும் ஆதரவு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

கேப்பாப்புலவு – பிலக்குடியிருப்பைச் சேர்ந்த 84 குடும்பங்கள், விமானப்படையினர் சுவீகரித்துள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மக்கள் கடந்த 15 நாட்களாக விமானப்படை முகாமுக்கு முன்பாக கடும் வெயிலிலும் பனியிலும் வீதியோரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

unnamed (16)

unnamed (15)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg