Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் கோரிக்கை கடிதம் கையளித்தார்

In
Updated: 13:03 GMT, Feb 14, 2017 | Published: 03:46 GMT, Feb 14, 2017 |
0 Comments
1270
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
vidyasagarrao2

எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 10 இற்கும் மேற்பட்டோர் ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்தித்து முதலமைச்சர் ஆவதற்கான கோரிக்கை கடிதத்தை கையளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் கூவத்தூர் நோக்கி சென்று கொண்டிருப்பதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையை அடைந்தார் எடப்பாடி பழனிச்சாமி: பாதுகாப்பு தீவிரம்

கூவத்தூரிலிருந்து புறப்பட்ட அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 12 பேர் ஆளுநர் மாளிகையை சென்றடைந்துள்ளனர்.

மாலை 5.30இற்கு ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ள நிலையில், அ.தி.மு.க.வினர் தற்போது அங்கு காத்திருக்கின்றனர். ஆளுநர் மாளிகையின் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆளுநரை இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி

அ.தி.மு.க.வின் புதிய சட்டமன்ற கட்சித் தலைவர் உள்ளிட்ட 12 பேரை இன்று மாலை 5.30 மணிக்கு நேரில் சந்திக்க வருமாறு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

தம்மை ஆட்சியமைக்க அனுமதிக்குமாறு எடப்பாடி பழனிச்சாமி விடுத்திருந்த கோரிக்கையை தொடர்ந்து, குறித்த சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றில் சரணடைய கால அவகாசம் கோரி சசிகலா மனு தாக்கல்

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சசிகலாவை பெங்களூர் நீதிமன்றில் உடன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தமக்கு உடல் நலம் சரியில்லை என்றும் நீதிமன்றில் சரணடைய கால அவகாசம் வழங்க வேண்டுமெனவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா அவசர மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனு இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஓ.பி.எஸ்.இற்கு ஆதரவளித்த நிர்வாகிகள் அ.தி.மு.க.விலிருந்து நீக்கம்

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார்.

பொன்னையன், பி.எச்.பாண்டியன், கே.பி.முனுசாமி, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராகுமாறு சசிகலாவிற்கு உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளென தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சசிகலா உள்ளிட்ட மூவரையும் பெங்களூர் நீதிமன்ற அறை எண் 48இல், நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் சரணடைய வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் நகர சிவில் நீதிமன்ற பதிவாளர் ராதாகிருஷ்ணன் இத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓ.பி.எஸ். நீக்கம்!

சசிகலா தலைமையில் கூவத்தூரில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனையை தொடர்ந்து, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க.வின் புதிய சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தெரிவு

அ.தி.மு.க.வின் புதிய சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கூவத்தூர் விடுதியில் சசிகலா தலைமையில் நடைபெற்ற ஆலோசனையின் பிரகாரம் இத் தெரிவு இடம்பெற்றுள்ளது.

சசிகலாவுக்கு பதிலாக புதிய சட்டமன்ற கட்சித் தலைவர்

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளியென தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க.வின் 125 சட்டமன்ற உறுப்பினர்களுள் ஒருவரை புதிய சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கவுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்களுடன் முக்கிய கலந்துரையாடலில் சசிகலா

கூவத்தூர் விடுதியிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுடன், அடுத்தகட்ட அரசியல் நகர்வு தொடர்பாக அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலா தற்போது முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

சசிகலாவிற்கு எதிரான தீர்ப்பை தொடர்ந்து கூவத்தூர் விரைந்தது விசேட அதிரடிப்படை

கூவத்தூரிலுள்ள விடுதியொன்றில் அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் சசிகலாவினால் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 200 விசேட அதிரடிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர்.

சசிகலாவிற்கு 4 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் 4 வருட சிறைத்தண்டனையும் ஒவ்வொருவருக்கும் தலா 10 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 10 வருடங்களுக்கு இவர்களுக்கு அரசியலில் ஈடுபட முடியாதென்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை உடன்  நீதிமன்றில் சரணடையுமாறு உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட மூவரையும் நான்கு வாரங்களுக்குள் நீதிமன்றில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சசிகலா குற்றவாளியென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நிறைவேறுமா சசிகலாவின் முதலமைச்சர் கனவு?

தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமையப்போகும் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், தமிழகத்தில் தொடரும் முதலமைச்சர் சர்ச்சை முடிவுக்கு வரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட  பேருக்கு எதிராக கடந்த 21 வருடங்களாக இடம்பெற்று வரும் இவ் வழக்கின் தீர்ப்பே தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிப்பதாக அமையவுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg