Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலா குற்றவாளி: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

In இந்தியா
Updated: 05:22 GMT, Feb 14, 2017 | Published: 04:25 GMT, Feb 14, 2017 |
0 Comments
1391
icon_com
This post was written by : Risha
sc__large

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டை விதிக்கப்பட்டுள்ளதுடன், 10 கோடி ரூபா அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூர் நீதிமன்றத்தில்  உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில், சசிகலாவிற்கு பத்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும் தொடர்புபட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்தமையால் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சொத்து குவிப்பு வழக்கு: இன்று தீர்ப்பு வெளியாகிறது

வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சம் ரூபா சொத்து சேர்த்ததாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கவுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவராய் ஆகியோரைக் கொண்ட அமர்வின் கீழ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

தீர்ப்பு எப்படியெல்லாம் அமையவுள்ளது என்பது குறித்து பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இன்றைய தினம், கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதிப்படுத்தப்படின் அதன்மூலம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நால்வரும் விடுதலை செய்யப்படலாம். அதேவேளை, கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்படின், நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்யலாம். அதன்மூலம், கீழ்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதத் தொகையும் உறுதிப்படுத்தப்படலாம்.

ஆனால், கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, மீண்டும் உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்படின், மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணை செய்து தீர்ப்பளிக்கும் வரை, நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு அமுலில் இருக்கும். ஆனால், இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் பிணை வழங்கியிருப்பதால் வழக்கை சந்திப்பவர்கள் சிறை செல்ல வேண்டியிருக்காது. ஆனால், நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு அமுலில் இருக்கும் என்பதால், தேர்தலில் போட்டியிட முடியாது. பதவியேற்க முடியாது.

ஆனால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவரும் முரண்பட்ட தீர்ப்பை வெளியிட்டால், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்படும். அப்போது மீண்டும் முதலில் இருந்து வழக்கு விசாரணை தொடங்கும். அதில் தீர்ப்பு வெளியாகும்வரை, கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்து அளித்த தீர்ப்பு அமுலில் இருக்கும். தேர்தலில் போட்டியிடவோ, பதவிகளை ஏற்கவோ தடை இருக்காது என சட்ட நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg