Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓ.பி.எஸ். இற்கு தொடரும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு

In இந்தியா
Updated: 04:39 GMT, Feb 14, 2017 | Published: 04:39 GMT, Feb 14, 2017 |
0 Comments
1081
icon_com
This post was written by : Risha
panneerselvam

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படும் கூவத்தூர் நட்சத்திர ஹோட்டலில் இருந்து தப்பிச் சென்ற செம்மலை, தற்போது ஓ.பி.எஸ்.-ஐ அவரது இல்லத்தில் சந்தித்து தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இதுவரை ஒன்பது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சசிகலா கூவத்தூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து, அவர்களுக்கான அனைத்து தேவைகளையும் வழங்கி வருகின்றார்.

இங்கிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தப்பிச் சென்று பன்னீர்செல்வத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், அப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg