Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலா ஆதரவாளர் அமைச்சர் பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி

In
Updated: 05:06 GMT, Feb 14, 2017 | Published: 05:06 GMT, Feb 14, 2017 |
0 Comments
1138
icon_com
This post was written by : Risha
edapadi_1660253f

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு ஆதரவான அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளருமான எஸ்.கே.செல்வம் தலைமையில் ஒரு குழுவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

சசிகலாவுக்கும், அ.தி.மு.க பொருளாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியால் அ.தி.மு.க.-வில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. இக்குழப்பத்துக்கு முக்கிய காரணம் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியே எனக் குற்றம்சாட்டியே அவருக்கு எதிராக புதிய அணி உருவாகி வருகிறது.

அதன்படி சேலம் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த எஸ்.கே.செல்வம், தற்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தன்னுடைய ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து வருகிறார்.

சசிகலா அணியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறி ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg