Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க திறைசேரியின் செயலாளராக ஸ்டீபன் நியமிக்கப்பட்டார்

In
Updated: 15:24 GMT, Feb 14, 2017 | Published: 05:14 GMT, Feb 14, 2017 |
0 Comments
1256
This post was written by : Sylviya

அமெரிக்க திறைசேரியின் செயலாளராக ஸ்டீபன் (Steven Mnuchin) என்பவர் நேற்று (திங்கட்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால், நியமிக்கப்பட்டுள்ளார்.

வரி தொடர்பான சீர்த்திருத்தங்கள், நிதிக் கட்டுப்பாடு மற்றும் பொருளாதார இராஜதந்திர முயற்சிகள் ஆகியன தொடர்பான பொறுப்புக்கள் இவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டீபன் தொடர்பில் கருத்து தெரிவித்த ட்ரம்ப், “அமெரிக்க குடிமக்களுக்கு ஸ்டீபன் சிறந்த ஒரு தலைவராக இருப்பார். தனது பொறுப்புக்கள் தொடர்பில் ஸ்டீபன் நன்கு அறிவார். முதல்தர வணிகர்களின் இருப்பிடமாக அமெரிக்காவை மாற்றுவார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை” என தெரிவித்துள்ளார்.

54 வயது மதிக்கத்தக்க ஸ்டீபன் கருத்து தெரிவித்த போது, “அமெரிக்காவில் தொழில் வாய்ப்புக்களை அதிகரிப்பது தொடர்பில் நான் அக்கறை செலுத்துவேன். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அமெரிக்காவை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்கு என்னாலான அனைத்து கருமங்களையும் நான் மேற்கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg