Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும்

In கிாிக்கட்
Updated: 07:05 GMT, Feb 14, 2017 | Published: 06:11 GMT, Feb 14, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Elakkiya
indiacricketteaml

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள அவுஸ்ரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடருக்கான இந்திய அணி இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இந்த அணித்தெரிவு நடைபெறவுள்ளது. பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற வீரர்கள் மாற்றமின்றி இந்திய அணியில் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்ரேலியா அணி நான்கு போட்டிகள் டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் எதிர்வரும் 23 ஆம் திகதியும், 2 ஆவது போட்டி பெங்களூருவில் மார்ச் 4 ஆம் திகதியும், 3 ஆவது போட்டி ராஞ்சியில் மார்ச் 16 ஆம் திகதியும் 4 ஆவது போட்டி தரம்சாலாவில் மார்ச் 25 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய ‘ஏ’ அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்திலும் அவுஸ்ரேலிய அணி பங்கேற்கவுள்ளது. இந்த போட்டி மும்பையில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg