Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய நாடாளுமன்றின் கீழ்ச்சபை சபாநாயகர் இஸ்ரேல் விஜயம்

In
Updated: 07:45 GMT, Feb 14, 2017 | Published: 07:41 GMT, Feb 14, 2017 |
0 Comments
1162
icon_com
This post was written by : Sylviya
07

பிரித்தானிய நாடாளுமன்றின் கீழ்ச்சபை சபாநாயகர் ஜோன் பர்க்கோ (John Bercow), நேற்று (திங்கட்கிழமை) இஸ்ரேலின் நாடாளுமன்றிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை இஸ்ரேலிய நாடாளுமன்றின் சபாநாயகர் யூலி (Yuli Edelstein) இனிதே வரவேற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு பிரித்தானிய நாடாளுமன்றில் உரையாற்ற அனுமதியளிக்கும் விடயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஜோன் அறிவித்ததன் பின்னரே குறித்த விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, அண்மையில் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ட்ரம்பிற்கு அழைப்பு விடுத்தமையின் பின்னரே இது குறித்த சர்ச்சைகள் எழ ஆரம்பித்தன.

அகதிகள் மற்றும் ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்கு வரமுடியாத வகையில் ட்ரம்பினால் தடை விதிக்கப்பட்டது.

மேற்குறித்த தடைகளை அகற்றாது ட்ரம்ப் பிரித்தானியாவுக்குள் காலடி எடுத்து வைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி சுமார் 1.8 மில்லியன் பிரித்தானிய மக்கள் மனுவொன்றில் கைச்சாத்திட்டனர்.

மேலும், ட்ரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவின் பல பாகங்களில் பல ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையிலேயே ட்ரம்பிற்கு பிரித்தானிய நாடாளுமன்றில் உரையாற்ற அனுமதி அளிக்கக் கூடாது என, ஜோன் தனது தரப்பு நியாயங்களை விளக்கியிருந்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg