Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்து டெஸ்ட் அணித்தலைவராக ஜோ ரூட்

In கிாிக்கட்
Published: 09:26 GMT, Feb 14, 2017 |
0 Comments
1163
icon_com
This post was written by : Elakkiya

இங்கிலாந்து டெஸ்ட் அணித்தலைவராக ஜோ ரூட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக அணித்தலைவராக பணியாற்றிய அலாஸ்டர் குக் கடந்த வாரம் பதவி ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய அணித்தலைவராக ஜோ ரூட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 வயதுடைய ஜோ ரூட் கடந்த 2012 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியிருந்தார். அன்றிலிருந்து இன்றுவரை 4594 டெஸ்ட் ஓட்டங்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி 2015 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அணியின் துணைத் தலைவராகவும் பணியாற்றுகின்றார்.

சர்வதேச கிரிக்கட் சபையில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரசரிசையில் மூன்றாவது இடத்திலுள்ள ரூட், இங்கிலாந்து அணியின் 80 ஆவது டெஸ்ட் அணித்தலைவராவார்.

எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி தென் ஆபிரிக்க அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக ஜோ ரூட் அணித்தலைவராக பொறுப்பேற்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg