Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கில் அம்பியுலன்ஸ் சேவை முடங்கும் அபாயம்

In இலங்கை
Updated: 10:53 GMT, Feb 14, 2017 | Published: 09:54 GMT, Feb 14, 2017 |
0 Comments
1287
This post was written by : Surenth

கிழக்கு மாகாணத்தில் நோயாளிகளை அழைத்து செல்லும் அம்பியுலன்ஸ் சேவைகள் உட்பட்ட பல சுகாதார சேவைகள் முடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஏறாவூரில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது சுகாதார வைத்திய அதிகாரிகளினால் முதலமைச்சரிடம் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக, மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள பிராந்திய சுகாதாரத் திணைக்களத்திற்குச் சேரவேண்டிய நிர்வாகச் செலவுகளுக்கான கட்டு நிதி ஒதுக்கீடு முடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, வாகனம் செர்விஸ் செய்யப்படாமல் இருப்பதாகவும் அதற்கான பணம் இன்னும் வழங்கப்படவில்லை எனவும் இதன் போது அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

செர்விஸ் செய்யாமல் வாகனம் செலுத்தப்படுமாக இருந்தால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக சாரதிகள் அஞ்சுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சுகாதார வைத்திய அதிகாரி சேவை, மற்றும் சுகாதார சேவைகளுக்காக முச்சக்கரவண்டி உட்பட 22 வாகனங்களும், நிர்வாக அலுவல்களுக்காக 39 வாகனங்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg