Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பிற்கான அழைப்பை பிரித்தானியா மீளப்பெறுவது குறித்த மனு நிராகரிக்கப்பட்டது

In
Updated: 12:27 GMT, Feb 14, 2017 | Published: 10:44 GMT, Feb 14, 2017 |
0 Comments
1244
icon_com
This post was written by : Sylviya
11

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு விடுக்கப்பட்ட அழைப்பை பிரித்தானியா மீளப்பெற வேண்டும் எனக்கோரி பிரித்தானியர்களால் கைச்சாத்திடப்பட்ட மனு பிரித்தானிய அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரித்தானிய அரசாங்கம், மக்களால் கைச்சாத்திடப்பட்ட மனு தொடர்பில் பரிசீலனை செய்ததாகவும், ஆனால் டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு வர வேண்டும் என கைச்சாத்திடப்பட்ட மனுவில் 309,000 பேர் கைச்சாத்திட்டுள்ளதால் அது தொடர்பில் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில்  உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் பிரித்தானிய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுமார் 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கைச்சாத்திட்டுள்ள மனுவில் ட்ரம்பின் விஜயம் பிரித்தானிய மகாராணியை வருத்தத்திற்கு உள்ளாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இரு மனுக்கள் தொடர்பிலும் எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி பிரித்தானிய நாடாளுமன்றின் கீழ்ச்சபையில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg