Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூரில் 74 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்

In இலங்கை
Updated: 10:53 GMT, Feb 14, 2017 | Published: 10:27 GMT, Feb 14, 2017 |
0 Comments
1192
icon_com
This post was written by : Surenth

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் நிருவாகத்திலுள்ள பல கிராமங்களில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாக சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

நேற்று (திங்கட்கிழமை) ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் அதிகளவான டெங்கு நோயாளர்களைக் கொண்ட பிரிவாக ஏறாவூர்ப்பற்றிலுள்ள சில கிராமங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, ஹிஸ்புல்லாஹ் கிராமம், மீராகேணி, மிச்நகர் உட்பட இன்னும் அவற்றை அண்டியுள்ள சில கிராமங்களில் இந்த டெங்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

கடந்த செப்டெம்பெர் மாதம் வரை ஏறாவூரில் 19ஆக இருந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஜனவரியாகும் போது 74 ஆக அதிகரித்திருப்பது குறித்து அனைத்துத் தரப்பினரும் எச்சரிக்கையுடன் விழிப்படைய வேண்டும் எனவும் இதன் போது வேண்டுகோள் விடுத்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg