Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு: ஒன்பது பேர் உயிரிழப்பு

In உலகம்
Published: 11:03 GMT, Feb 14, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Sylviya
12

சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹனான் மாகாணத்தில் இன்று (செவ்வாய்கிழமை) ஏற்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெடிப்பு லியான்யுவான் (Lianyuan) நகரில் உள்ள ஸூபாவோ (Zubao) நிலக்கரி சுரங்கத்தில், உள்ளூர் நேரப்படி 01.37 மணியளவில் ஏற்பட்டதாக உள்ளூர் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த வெடிப்பு ஏற்பட்ட போது, மொத்தமாக 29 பேர் அந்த சுரங்கத்தில் பணிபுரிந்துக்கொண்டு இருந்ததாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நிலக்கரி சுரங்க விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg