Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லாஹோர் குண்டு வெடிப்பு: 13 பேர் உயிரிழப்பு, 83 பேர் காயம்

In உலகம்
Published: 11:31 GMT, Feb 14, 2017 |
0 Comments
1250
icon_com
This post was written by : Sylviya
13

பாகிஸ்தானின் லாஹோர் நகரில் நேற்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 83 காயமுற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் மருந்து உற்பத்தியாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குறித்த குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஐவர் பொலிஸார் என இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸார் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெடிப்பு தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் வெற்றிகரமான முறையில் பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்கொலைத் தாக்குதல்தாரி ஒருவர் அவரது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார்” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg