Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஜா பூக்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்வதையே விரும்புகின்றோம்: டிலான் பெரேரா

In இலங்கை
Updated: 12:02 GMT, Feb 14, 2017 | Published: 11:43 GMT, Feb 14, 2017 |
0 Comments
1210
icon_com
This post was written by : Surenth
Dilan Perera

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் காதலர் தினத்தில் ரோஜா பூக்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்வதையே விரும்புவதாக பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரோஜா பூ ஒன்றை கொடுக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் ரோஜா பூக்களை பரிமாற்றிக்கொள்வதையே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் விரும்புவதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

சில நாடுகளில் விஷேட தினங்களை அந்த தினங்களில் மாத்திரம் கொண்டாடுவதாகவும் இலங்கையில் நாளாந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg