Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலையாள படத்தில் நடிக்க ஆசைப்படும் தமன்னா

In சினிமா
Updated: 11:55 GMT, Feb 14, 2017 | Published: 11:54 GMT, Feb 14, 2017 |
0 Comments
1252
icon_com
This post was written by : Risha
thamanna

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, மலையாள படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொள்ளவதற்காக தமன்னா கேரளா சென்றிருந்த நிலையில், அங்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ‘எனக்கு பிடித்த மலையாள நடிகர் மம்முட்டி. அவர் இத்தனை ஆண்டுகள் திரை உலகில் இருந்தாலும், இன்றுவரை இளம் ரசிகர்களை கவர்ந்து தன்னிடம் வைத்து இருக்கிறார். இது எனக்கு வியப்பாக உள்ளது.

65 வயதானாலும் மம்முட்டி இன்னும் இளமையாக இருக்கிறார். அவரை நேரில் பார்த்தால், ‘உங்களால் மட்டும் எப்படி சார் இன்னும் இளமையாக இருக்க முடிகிறது’ என்று நிச்சயம் கேட்பேன். விரைவில் மலையாள படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்.’ என்றும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg