Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விரைவில் ஆளுநரை சந்திக்கிறார் ஓ.பி.எஸ்

In
Published: 15:35 GMT, Feb 14, 2017 |
0 Comments
1198
icon_com
This post was written by : Surenth
Panneerselavam With Vidyasagar Roa

தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக அ.தி.மு.கவின் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரியிருந்தார்.

இதனையடுத்து, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிக்கும் மைத்ரேயன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆளுநரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து மேலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சசிகலா மீதான தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய திட்டம்

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.

இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆட்சி அமைப்பதற்கான பெரும்பானமை தம்மிடம் உள்ளதாகவும் இதன் காரணமாக அளுநர் தங்களை அழைப்பார் என்பதில் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பன்னீர்செல்வம் அ.தி.மு.கவிற்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் அவரை கட்சியில் இருந்து நீக்கியமையால் அவருக்கு ஆட்சி அமைக்க முடியாது எனவும் அவர் சுட்டிகாட்டினார்.

கூவத்தூரில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டமையால் பதற்றம்

கூவத்தூர் பகுதியில் தங்கி உள்ளவர்களை உடனடியாக அங்கு இருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கூவத்தூர் பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 என்ற தடை உத்தரவிற்கு அமையவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிடுவதாகவும் இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் காணப்படுவதாகவும் அங்கிருக்கும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓ.பி.எஸ் அணி ஆளுநரை சந்தித்து பேச்சு

மைத்ரேயன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆளுநரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 10 இற்கும் மேற்பட்டோர் ஆட்சி அமைக்க அனுமதிக்க கோரி ஆளுநரை சந்தித்த நிலையிலேயே குறித்த இந்த சந்திப்பு நடைபெறுகின்றது.

ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஆளுநரை சந்திக்கின்றனர்

முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளனர்.

இன்று மாலை 7 மணிக்கு சந்தித்து பன்னீர்செல்வத்தை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்படும் தெரிவிக்கப்படுகின்றது.

கூவத்தூர் விடுதியில் இருந்து வெளியேற்ற அனுமதிக்க மாட்டோம்: நவநீதகிருஷ்ணன்

கூவத்தூர் விடுதியில் இருந்து சட்ட மன்ற உறுப்பினர்களை வெளியேற்ற நினைப்பது சட்டவிரோத, மனசாட்சிக்கு விரோதமான செயலாகும் என அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சற்றுமுன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த பகுதியில் இருந்து எங்களை வெளியேற்ற நினைத்தால் அதற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவும் தயங்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்தார்.

எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் கோரிக்கை கடிதம் கையளித்தார்

எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 10 இற்கும் மேற்பட்டோர் ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்தித்து முதலமைச்சர் ஆவதற்கான கோரிக்கை கடிதத்தை கையளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் கூவத்தூர் நோக்கி சென்று கொண்டிருப்பதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையை அடைந்தார் எடப்பாடி பழனிச்சாமி: பாதுகாப்பு தீவிரம்

கூவத்தூரிலிருந்து புறப்பட்ட அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 12 பேர் ஆளுநர் மாளிகையை சென்றடைந்துள்ளனர்.

மாலை 5.30இற்கு ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ள நிலையில், அ.தி.மு.க.வினர் தற்போது அங்கு காத்திருக்கின்றனர். ஆளுநர் மாளிகையின் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆளுநரை இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி

அ.தி.மு.க.வின் புதிய சட்டமன்ற கட்சித் தலைவர் உள்ளிட்ட 12 பேரை இன்று மாலை 5.30 மணிக்கு நேரில் சந்திக்க வருமாறு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

தம்மை ஆட்சியமைக்க அனுமதிக்குமாறு எடப்பாடி பழனிச்சாமி விடுத்திருந்த கோரிக்கையை தொடர்ந்து, குறித்த சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg