Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தீபாவின் அரசியல் ஆரம்பம்

In
Published: 16:25 GMT, Feb 14, 2017 |
0 Comments
1538
icon_com
This post was written by : Surenth
Deeba

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தான் அரசியலில் ஈடுபட போவதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

மெரினா கடற்கரையில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிபிட்டார். இதன் போது முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார்.

தனது அரசியல் பயணத்தை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் மெரினாவில் ஓ.பி.எஸ் – தீபாவுடன் பேச்சு

தற்போது காணப்படும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றுள்ளார்.

மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின்னர் இருவருமாக அங்குள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இதனையடுத்து, இருவரும் இணைந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பார்கள் எனறும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊடகவியலாளர்கள் மீது கூவத்தூரில் தாக்குதல்

கூவத்தூர் பகுதியில் செய்தி சேகரிப்பிற்காக சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கூவத்தூரில் உள்ள வாயிலை மறித்து ஊடகவியலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

விரைவில் ஆளுநரை சந்திக்கிறார் ஓ.பி.எஸ்

தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக அ.தி.மு.கவின் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரியிருந்தார்.

இதனையடுத்து, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிக்கும் மைத்ரேயன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆளுநரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து மேலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சசிகலா மீதான தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய திட்டம்

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.

இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆட்சி அமைப்பதற்கான பெரும்பானமை தம்மிடம் உள்ளதாகவும் இதன் காரணமாக அளுநர் தங்களை அழைப்பார் என்பதில் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பன்னீர்செல்வம் அ.தி.மு.கவிற்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் அவரை கட்சியில் இருந்து நீக்கியமையால் அவருக்கு ஆட்சி அமைக்க முடியாது எனவும் அவர் சுட்டிகாட்டினார்.

கூவத்தூரில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டமையால் பதற்றம்

கூவத்தூர் பகுதியில் தங்கி உள்ளவர்களை உடனடியாக அங்கு இருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கூவத்தூர் பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 என்ற தடை உத்தரவிற்கு அமையவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிடுவதாகவும் இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் காணப்படுவதாகவும் அங்கிருக்கும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓ.பி.எஸ் அணி ஆளுநரை சந்தித்து பேச்சு

மைத்ரேயன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆளுநரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 10 இற்கும் மேற்பட்டோர் ஆட்சி அமைக்க அனுமதிக்க கோரி ஆளுநரை சந்தித்த நிலையிலேயே குறித்த இந்த சந்திப்பு நடைபெறுகின்றது.

ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஆளுநரை சந்திக்கின்றனர்

முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளனர்.

இன்று மாலை 7 மணிக்கு சந்தித்து பன்னீர்செல்வத்தை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்படும் தெரிவிக்கப்படுகின்றது.

கூவத்தூர் விடுதியில் இருந்து வெளியேற்ற அனுமதிக்க மாட்டோம்: நவநீதகிருஷ்ணன்

கூவத்தூர் விடுதியில் இருந்து சட்ட மன்ற உறுப்பினர்களை வெளியேற்ற நினைப்பது சட்டவிரோத, மனசாட்சிக்கு விரோதமான செயலாகும் என அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சற்றுமுன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த பகுதியில் இருந்து எங்களை வெளியேற்ற நினைத்தால் அதற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவும் தயங்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg