Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலா உள்ளிட்டோர் இன்று சரணடைவார்களா?

In இந்தியா
Published: 04:20 GMT, Feb 15, 2017 |
0 Comments
1098
icon_com
This post was written by : Shailu
da-case-sc-to-decide-fate-of-sasikala-tomorrow

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) சரணடைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், நீதிமன்றத்தை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இதனிடையே, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்ததும், அவர்கள் மூன்று பேரும் பெங்களூர், அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றம் தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கியது.

மேலும், இவர்கள் உடனடியாக பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பெங்களூர் நகர சிவில் நீதிமன்றத்தில் உள்ள 48-ஆவது அறையில் நீதிபதி அஸ்வத் நாராயணா முன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சரணடைய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.ஆனால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகவில்லை.

இதனிடையே, உடல்நல குறைவு ஏற்பட்டமை காரணமாக நீதிமன்றத்தில் சரணடைய 4 வாரங்கள் கால அவகாசம் கேட்டு சசிகலா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும் பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) சரணடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg