Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் நசீர் ஜம்சத் விடுதலை!

In கிாிக்கட்
Published: 05:33 GMT, Feb 15, 2017 |
0 Comments
1225
icon_com
This post was written by : Anojkiyan
jams

சூதாட்ட புகாரில் கைதுசெய்யப்பட்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நசீர் ஜம்சத் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளின் அடிப்படையில் பிரித்தானியாவில் வைத்து நசீர் ஜம்சத்துடன் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இவ் இருவரும் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நசீர் ஜம்சத்துக்கு ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்திருந்தது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில், ஏற்கனவே ஷர்ஜீஸ்கான், காசித் லத்தீப் மீது சூதாட்ட புகார் எழுந்தது. இதையடுத்து இருவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg