Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட கொரிய ஜனாதிபதியின் சகோதரன் மலேசியாவில் கொலை

In உலகம்
Updated: 11:17 GMT, Feb 15, 2017 | Published: 05:30 GMT, Feb 15, 2017 |
0 Comments
1295
icon_com
This post was written by : Elakkiya

உலக நாடுகளுக்கு சவாலாக திகழ்ந்து வரும் வட கொரியா தலைவர் கிம் ஜோங்-உன்னின் சகோதரரான 45 வயதான கிங் ஜோங்-நாம் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தென் கொரியா உறுதிப்படுத்தியுள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை விஷ தாக்குதலுக்கு இலக்காகி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலுக்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்பதுடன் தாக்குதல்தாரிகளும் அடையாளம் காணப்படவில்லை.

இவ்வாறிருக்க இந்த தாக்குதலின் பின்னணியில் வடகொரியா இருப்பதாக அமெரிக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த நபர் இரண்டு பெண்கள் மூலம் விச ஊசி ஏற்றப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இந்த சம்பவம் வட கொரியாவின் மிருகத்தனமான மற்றும் மனிதாபிமானமற்ற கொடூர ஆட்சிக்கு அடையாளமாக இருக்க முடியும் என்று தென் கொரிய இடைக்கால ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg