Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊர்காவற்றுறை படுகொலை: அடுத்த விசாரணை தினத்தன்று அடையாள அணிவகுப்பு

In இலங்கை
Updated: 06:20 GMT, Feb 15, 2017 | Published: 06:19 GMT, Feb 15, 2017 |
0 Comments
1360
This post was written by : Varshini

யாழ்.ஊர்காவற்றுறையில் கர்ப்பிணி பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களை அடுத்த விசாரணை தினமான எதிர்வரும் 22ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.ரியாழ் முன்னிலையில் நடைபெற்றபோது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அடையாள அணிவகுப்பு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருந்த போதும் சாட்சி விசாரணை மாத்திரமே பதிவுசெய்யப்பட்டன. படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் சடலத்தை முதலில் கண்ட அயல் வீட்டு பெண் ஆகியோரின் சாட்சியங்கள், நீதவானின் பிரத்தியேக அறையில் வைத்து பதிவுசெய்யப்பட்டன. குறித்த சாட்சியப் பதிவு அடுத்த விசாரணை தினத்தன்றும் தொடருமென நீதவான் அறிவித்துள்ளார்.

குறித்த கொலையில் கண்கண்ட சாட்சியாக உள்ள வாய்ப்பேச முடியாத சிறுவன் ஒருவனுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அச் சிறுவனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊர்காவற்றுறை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றது. கொலையுண்டவர், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் பணியாற்றும் அலுவலர் ஒருவரது மனைவியாவார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg