Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாவனையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் Facebook Lite

In தொழில்நுட்பம்
Updated: 06:28 GMT, Feb 15, 2017 | Published: 06:27 GMT, Feb 15, 2017 |
0 Comments
1108
icon_com
This post was written by : Shailu
fblite

சமூக வலைதளங்களில் பேஸ்புக் வலைத்தளமானது அதிக பாவனையாளர்களை கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே..

அந்தவகையில், பல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பேஸ்புக் வலைத்தளமானது விரைவில் 2 பில்லியன் பயனர்களை எட்டவுள்ளது.

அதாவது, பேஸ்புக்கை அதிகளவானவர்கள் தமது கையடக்க தொலைபேசிகளிலேயே பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக விசேட அப்பிளிக்கேஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

எனினும் குறைந்தளவு டேட்டா பாவனை மற்றும் விரைவாக செயற்படக்கூடியது என்பவற்றின் அடிப்படையில் பேஸ்புக் லைட் (Facebook Lite) அப்பிளிக்கேஷனே அதிக பயன்பாட்டில் காணப்படுகின்றது.

தற்போது இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 200 மில்லியனை எட்டியுள்ளதாக பேஸ்புக்கின் தலைமை இயக்குனரான Sheryl Sandberg தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாத அறிக்கைகளின்படி இந்த எண்ணிக்கை 100 மில்லியனாக காணப்பட்டதாகவும், அதன் பின்னரான இந்த ஒரு வருட காலத்தில் மேலும் 100 மில்லியனால் அதிகரித்து 200 மில்லியனை எட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg