Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரிக்கெட் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய கால அவகாசம் கேட்கும் மிஸ்பா!

In கிாிக்கட்
Updated: 08:23 GMT, Feb 15, 2017 | Published: 07:27 GMT, Feb 15, 2017 |
0 Comments
1129
icon_com
This post was written by : Anojkiyan
misba-main

தொடர் தோல்வியினால் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் மிஸ்பா உல்-ஹக், தனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய 10 முதல் 15 நாட்கள் வரை அவகாசம் கேட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷகாரியார் கான் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான தோல்வியனால், மிஸ்பா உல்-ஹக் தனது அணித்தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றது.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கானுடன், மிஸ்பா உல்-ஹக், டுபாயில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து ஷகாரியார் கான் கூறுகையில்,

2010ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணியின் தலைவராக மிஸ்பா உல்-ஹக் இருந்து வருகிறார். அந்த பணியை அவர் நன்றாக செய்துள்ளார். அவர் தொடர்ந்து விளையாட விரும்பினால், அணியின் தலைவராகவே தொடரலாம்.

அவர் ஓய்வு பெற முடிவு செய்தால், மூன்று வடிவிலான கிரிக்கெட்டுக்கும் ஒரே அணித்தலைவர் நியமிப்பதில் முன்னுரிமை கொடுப்போம்’ என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg