Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விவசாய வரிவிதிப்பு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிரேக்கத்தில் ஆர்ப்பாட்டம்

In ஐரோப்பா
Published: 07:25 GMT, Feb 15, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Elakkiya

கிரேக்க அரசின் விவசாய வரிவிதிப்பு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் எதென்ஸில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிரேக்கத்தின் பல்வேறு தீவுகளிலிருந்தும் எதென்ஸ் நகர மத்தியில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசுக்கு எதிரான பதாதைகள் மற்றும் கொடிகளை கைகளில் தாங்கியவாறு கோஷம் எழுப்பினர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர், ‘ புதிய சட்டம் மாற்றப்பட வேண்டும் என்று கோரியே நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடியுள்ளோம். விவசாய வரிவிதிப்பு சட்டம் நடைமுறையில் இருந்தால் எமக்கு மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படும்’ என்று கூறியுள்ளார்.

மற்றுமொருவர் தெரிவிக்கையில், ‘ விவசாயிகள் மீது திணிக்கப்பட்ட வரிவிதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இது விவசாயிகளுக்கு மாத்திரமல்ல நடுத்தர மற்றும் கீழ்மட்டங்களிலுள்ள குடும்பங்களுக்கும் இதே நிலைமைதான் உள்ளது’ என்று தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறிருக்க மேற்படி பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் மற்றும் அரச பிரதிநிதிகளுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக ஆர்ப்பாட்ட ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg