Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்றவர்கள் கைது

In இலங்கை
Published: 08:56 GMT, Feb 15, 2017 |
0 Comments
1061
icon_com
This post was written by : Vithushagan
unnamed

போலி ஆவணங்கள் தயாரித்து இரண்டு பசு மாடுகளை கொண்டு சென்ற இருவரை மஸ்கெலியா ரிகாடன் விசேட அதிரடி படையினர் கைது செய்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

ஹட்டன் பகுதியிலிருந்து கம்பளை வரை பழைய கொழும்பு வீதியூடாக நேற்று (செவ்வாய்க்கிழமை)  மாலை கொண்டு சென்று கொண்டிருந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளபட்டுள்ளது.

சுற்றி வளைப்பின் போது இறைச்சிக்காக கொண்டு சென்ற இரண்டு பசு மாடுகள் மற்றும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய லொறி ஆகியன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மிருக வைத்தியரின் சான்றிதழில் மாற்றம் செய்த குற்றத்திற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்கள் இன்று (புதன்கிழமை) ஹட்டன் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை பொலிஸார தெரிவித்தனர்.unnamed (2)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg