Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பத்து லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்க அரசு திட்டம்

In இலங்கை
Updated: 09:29 GMT, Feb 15, 2017 | Published: 09:29 GMT, Feb 15, 2017 |
0 Comments
1111
icon_com
This post was written by : Vithushagan
Sri-Lankan-government-logo5-720x480

எதிர்வரும் காலத்தில்   பத்து லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்காக ‘சுவசக்தி’   எனும் பெயரில் தேசிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டம் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சின் மூலம் இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து செயற்படுத்தப்படவுள்ளது.

சிறிய மற்றும் மத்திய வியாபார துறைகளில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கில் புதிய வியாபாரிகள் 25,000 இனை உருவாக்குவதை விருத்தி செய்வதற்காக பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் வணிக வங்கி ஆகியவற்றின் மூலம் கடன் வசதிகளை செய்து கொடுப்பது இவ்வேலைத்திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.

இதன் மூலம் சிறந்த வியாபார திட்டங்களின் திறனை கருத்திற் கொண்டு 250,000 ரூபாபாவிற்கு உட்பட்டதாக நிதி வசதிகளை செய்து கொடுப்பதுடன், அத்தொகையினுள் வியாபாரிகளுக்காக 50,000 ரூபா நிதியுதவியுடன், 200,000 ரூபா பெறுமதியான கடன் தொகையும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கடன் மற்றும் நிதியுதவி ஆகிய யோசனைகளை இலங்கை மத்திய வங்கியின் ஊடாக செயற்படுத்துவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg