Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்த அணியின் அடுத்த இலக்கு நிதியமைச்சர்! – லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

In இலங்கை
Published: 09:25 GMT, Feb 15, 2017 |
0 Comments
1099
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
ravi-karunanayake

ஊழல் மோசடி குறித்து முறைப்பாடு செய்யும் மஹிந்த அணியின் ‘சிறந்த பத்து’ முறைப்பாட்டு பட்டியலின் கீழ், இன்றைய தினம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 7 பேருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் எட்டாவது நபராக ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, இன்று (புதன்கிழமை) இந்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார்.

கடந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு 25 ஆயிரம் மில்லியன் ரூபா வருமானத்தை இல்லாமல் செய்ததாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த அணியின் ‘சிறந்த 10′ முறைப்பாட்டின் கீழ், பிரதமர் ரணில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg