Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.நா பாதுகாப்பு சபையின் கண்டன அறிக்கையை நிராகரித்தது வடகொரியா

In உலகம்
Updated: 11:39 GMT, Feb 15, 2017 | Published: 09:43 GMT, Feb 15, 2017 |
0 Comments
1196
icon_com
This post was written by : Elakkiya
NorthKoreaFlagPicture2

வட கொரியாவின் அண்மைய ஏவுகணைச் சோதனை குறித்த ஐ.நா பொதுப் பாதுகாப்பு சபையின் கண்டன அறிக்கையை வட கொரிய வெளியுறவு அமைச்சு நிராகரித்துள்ளது.

வட கொரிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளரை மேற்கோள்காட்டி இன்று (புதன்கிழமை) வட கொரிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

‘எமது அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளுக்கு தடை என்ற  ஐ.நா பாதுகாப்பு சபையின்  தீர்மானத்தினை நாம் எப்போதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம்’ என வட கொரிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்புக்களையும் மீறி தொடர்ச்சியாக ஏவுகணைச் சோதனை நடத்திவரும் வட கொரியா இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை எவுகணை சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg