Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்ற முனைப்பு சிங்களவர்களுக்கும் உண்டு என்கிறார் சுமந்திரன்!

In இலங்கை
Updated: 09:52 GMT, Feb 15, 2017 | Published: 09:51 GMT, Feb 15, 2017 |
0 Comments
1295
This post was written by : Varshini

நாட்டில் சுமார் 70 வருட காலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வுகாணப்பட வேண்டுமென சிங்கள மக்களும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், புதிய அரசியல் யாப்பை சிங்கள மக்களும் வரவேற்பார்கள் என நம்பிக்கை வெளியிட்டுளள்ளார்.

உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பில் நியாயமான அதிகாரப்பகிர்வு இடம்பெற வேண்டும் என்பது தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ள சுமந்திரன், அதிகாரப்பகிர்வு மட்டுமன்றி நிறைவேற்று அதிகாரம் மற்றும் தேர்தல் முறை மாற்றம் என சகல விடயங்களும் சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டுமென மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மக்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டே புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டுமென்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படும் என அண்மையில் அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது. எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருசாரார் இதுகுறித்த உடன்பாட்டிற்கு இன்னும் வரவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg