Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகுபலி-2 இல் ஷாருக்கான்: படக்குழுவினர் மறுப்பு

In சினிமா
Updated: 10:05 GMT, Feb 15, 2017 | Published: 10:05 GMT, Feb 15, 2017 |
0 Comments
1147
icon_com
This post was written by : Risha
bahu

பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஷாருக்கான் நடிப்பதாக வெளியாகிவந்த தகவல்களை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

எமது படத்தில் ஷாருக்கான் நடிப்பது மகிழச்சியே, எனினும் பாகுபலி – 2 இல், அவர் நடிக்கவில்லை. அவர் நடிப்பதாக வெளியான தகவல் வதந்தி என பாகுபலி-2 படக்குழுவினர் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாகுபலி’ படம் வசூல் ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு பாகமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பு பணிகளும் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் என முந்தைய பாகத்தில் நடித்த நடிகர்கள் இந்த பாகத்திலும் தொடர்ந்து நடித்துள்ளன.

இந்நிலையில், தற்போது இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சமாதான தூதுவராக பொலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg