Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திறமையான தொழில்நுட்ப உளவாளிகளை பணியில் சேர்க்க பிரான்ஸ் தீர்மானம்

In ஐரோப்பா
Updated: 11:42 GMT, Feb 15, 2017 | Published: 11:33 GMT, Feb 15, 2017 |
0 Comments
1078
icon_com
This post was written by : Elakkiya
dLTKG8Q

தீவிரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் இணைய ஊடுருவல்களை சமாளிப்பதற்கு திறமையான தொழில்நுட்ப உளவாளிகளை பணிக்கு அமர்த்துவதற்கு பிரான்ஸ் தீர்மானித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 2019 ஆம் ஆண்டுக்குள் 600 புதிய உளவாளிகளை பணியில் சேர்க்க பிரான்ஸ் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் ஏற்கனவே உளவுத்துறையில் இருப்பவர்களையும் சேர்த்து மொத்தமாக 7000 அதிகார உளவாளிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினி மற்றும் இணையத்தை திறமையாக கையாள்பவர்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், பொறியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் இந்த வேலையில் சேர விரும்புபவர்கள் பிரெஞ்ச் மொழி மட்டுமில்லாது ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு அடிப்படை ஊதியமாக €33000லிருந்து €35,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg