Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விமான நிலைய பாதுகாப்பு நடவடிக்கைக்கு மோப்ப நாய்கள்

In இலங்கை
Published: 13:44 GMT, Feb 15, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Vithushagan
101015180317_sniffdog

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

20 நாய் குட்டிகளை கொள்வனவு செய்து, பயிற்சியளித்து விமான நிலையத்தில் விமானங்களின் பாதுகாப்புக்காக இணைத்துக் கொள்வதற்கு, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விமானப் பயணிகள், பணியாளர்கள், செயற்பாட்டு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட சிவில் விமான சேவையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது அனைத்து அரசுகளினதும் பொறுப்பு என்பதுடன், வெடிபொருட்கள், ஆயுதங்கள், போதைப் பொருட்கள், பணம் மற்றும் சட்டவிரோதப் பொருட்களை கண்டுபிடிப்பதற்காக பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg