Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை : கயந்த கருணாதிலக

In இலங்கை
Updated: 14:00 GMT, Feb 15, 2017 | Published: 13:21 GMT, Feb 15, 2017 |
0 Comments
1369
This post was written by : Vithushagan

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்று நடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை துணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். இதற்கு அமைச்சர் கஜந்த கருணாதில பதிலளித்தார்.

மேலும் ’சமூக வலைத்தளங்களை ஒழுங்குறுத்துவதற்கான நடைமுறை உலக நாடுகளில் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இவ்வாறான சமூக வலைத்தளங்களை பொதுமக்கள் பயன்படுத்துவது தொடர்பில் அவற்றை தெளிவுபடுத்துவதற்கு நாம் முயற்சிக்கின்றோம் . ஆனால் இதனை கட்டுப்படுத்துவதற்கோ நிறுத்துவதற்கோ நாம் தீர்மானிக்கவில்லை’ என்று குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg