Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நவீன மயப்படுத்தப்படும் வாழ்வின் எழுச்சி வங்கிகள்

In இலங்கை
Published: 14:14 GMT, Feb 15, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Vithushagan
5c4b9e6d0d1c9c30e1eb013ee861a26e_L

நாடு முழுவதிலுமுள்ள வாழ்வின் எழுச்சி வங்கிக் கிளைகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளைக்கொண்ட இயந்திரங்கள் அமைக்கப்படவுள்ளன.

பாவனையாளர்களுக்கு இலகுவாக மின்சாரம் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை கொண்ட இயந்திரங்களை அமைப்பதற்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைவாக நாடு முழுவதிலுமுள்ள 1074 வாழ்வின் எழுச்சி வங்கிக்கிளைகளுக்கான நவீன தொழில்நுட்பத்தைக்கொண்ட கட்டணத்தை செலுத்துவதற்கான இயந்திரங்களை அறிமுகப்படுத்துவதற்காக வாழ்வின் எழுச்சித்திணைக்களமும் ஜே அன் கோ நிறுவனமும் சமூக வலுவூட்டல் மற்றும் சேமநல அமைச்சில் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டனர்.

நாடு முழுவதிலுமுள்ள 1074 வாழ்வின் எழுச்சி வங்கிக்கிளைகளில் 7 மில்லியன் வாடிக்கையாளர்கள் இதற்கமைவாக தொலைபேசி நீர் மின்சாரம் மற்றும் காப்புறுதிக்கொடுப்பனவுகளையும் அனைத்து கையடக்க தொலைபேசிகளுக்கான மீள்நிரப்பு நடவடிக்கைகளையும் இலகுவாக மேற்கொள்ளமுடியும்.

இதுதொடர்பான உடன்படிக்கை கைச்சாத்து நிகழ்வில் அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க வாழ்வின் எழுச்சி பணிப்பாளர் நாயகம் நீல் ஹப்புஹின்ன அமைச்சின் ஆலோசகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg