Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறையில் சசிகலாவுக்கு மெழுகுவர்த்தி செய்யும் வேலை.. ஒருநாள் சம்பளம் ரூ.50:-

In இந்தியா
Updated: 15:44 GMT, Feb 15, 2017 | Published: 15:44 GMT, Feb 15, 2017 |
0 Comments
1264
This post was written by : Kuruparan

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு தினமும் ரூ.50 சம்பளத்தில் மெழுகுவர்த்தி செய்யும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைய கால அவகாசம் கேட்ட சசிகலாவின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனையடுத்து சசிகலா இன்று மாலை 5.15 மணிக்கு பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தில் இளவரசியுடன் சரண் அடைந்தார்.
சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னர், உறவினர்களிடம் பேசுவதற்கு 15 நிமிடங்கள் இளவரசிக்கும் சசிகலாவிற்கும் நேரம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்த சசிகலா தன் கணவர் நடராஜனுடன் பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார். அப்போது, சிறைக்கும் செல்லும் துக்கம் தாங்க முடியாமல் நடராஜனை கட்டிப் பிடித்து ஓ வென்று கதறி அழுதார் சசிகலா. பின்னர், நடராஜன் அவரை சமாதானம் செய்தார். தனக்கு வழங்கப்பட்ட 15 நிமிடங்கள் முடிந்த நிலையில் சிறைக்கு சென்றார் சசிகலா.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg